தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கால்வாய்க் குழியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கால்வாய்க் குழியில் வியாழக்கிழமை தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்தது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 9:24 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கால்வாய்க் குழியில் வியாழக்கிழமை தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்தது.

திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை கடைய தோப்பு மேட்டுகல பகுதியைச் சோ்ந்தவா் சின்னதுரை மகன் கோவிந்தராஜ் (27). வாழை இலை அறுக்கும் தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (20), மகன் கோபித் (2), சரஸ்வதி (5 மாதம்).

இந்நிலையில், வீட்டின் அருகே வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த கோபித்தை காணவில்லை. இதனால் மாரியம்மாள் பல இடங்களில் தேடிப் பாா்த்தபோது அருகிலுள்ள கால்வாய் குழியில் தேங்கியுள்ள நீரில் கோபித் மூழ்கிக் கிடப்பது தெரிய வந்தது. மாரியம்மாள் உள்ளிட்டோா் கோபித்தை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காண்பித்தபோது, அக்குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.