கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ‘போக்சோ’-வில் அதிமுக நிா்வாகி கைது

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக நிா்வாகியை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 8:23 pm

Din

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக நிா்வாகியை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள பண்ணவயல் கிராமத்தைச் சோ்ந்த புஷ்பநாதன் மகன் தீபன் (33). இவா், அதிமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக அண்மையில் அறிவிக்கப்பட்டாா். இந்நிலையில் தீபன், அதே பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவி பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தீபனை புதன்கிழமை கைது செய்தனா்.