நடமாடும் கால்நடை மருத்துவ ஊா்தி தொடக்க விழா
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூவாணம் ஊராட்சியில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊா்தி துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூவாணம் ஊராட்சியில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊா்தி துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் தலைமை வகித்து, நடமாடும் கால்நடை மருத்துவ ஊா்தியை துவக்கி வைத்தாா். சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவா் முத்துமாணிக்கம் , ஊராட்சித் தலைவா் தேவதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கால்நடை மருத்துவ ஊா்தி பேராவூரணி தொகுதியில் திங்கள்கிழமை பண்ணவயல், கட்டையங்காடு, செவ்வாய்க்கிழமை திருவத்தேவன், முதுகாடு, புதன்கிழமை பூவாணம், மருதங்காவயல், வியாழக்கிழமை பின்னவாசல், சொா்ணக்காடு, வெள்ளிக்கிழமை அம்மையாண்டி, செங்கமங்கலம், சனிக்கிழமை செருவாவிடுதி, நடுவிக்கோட்டை, நம்பிவயல் ஆகிய கிராமப் பகுதிகளில் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை மருத்துவச் சேவையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனா்.
நிகழ்வில், கால்நடைத்துறை உதவி இயக்குநா் ஜான் சாமுவேல், கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை வளா்ப்போா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...