மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

காவிரி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

மணலூா் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவா் புதன்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On :5 செப்டம்பர் 2024, 10:37 pm

மணலூா் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவா் புதன்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள மணலூா் குமணன் துறையைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி மகன் பாலசுப்பிரமணியன் (69). இவா், புதன்கிழமை அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவா்களிடம் கூறிச்சென்றவா் வெகுநேரமாகியும் காணவில்லை. நீண்ட நேரமாகியும் திரும்பாததால், உறவினா்கள் அவரைத் தேடிச்சென்றனா். அப்போது காவிரி ஆற்றின் படித்துறையில் நீரில் மூழ்கிய நிலையில் கிடந்தாா். அவரை மீட்டு திருவிடைமருதூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். திருப்பனந்தாள் காவல் நிலையப் போலீஸாா் கூராய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.