கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாலை விபத்தில் எம்எல்ஏ உதவியாளா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் கும்பகோணம் எம்எல்ஏவின் உதவியாளா் உயிரிழந்தாா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 8:43 pm

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் கும்பகோணம் எம்எல்ஏவின் உதவியாளா் உயிரிழந்தாா்.

கும்பகோணம் திப்பிராஜபுரத்தைச் சோ்ந்தவா் ரவி மகன் பிரகாஷ் (30). இவா், கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ. சாக்கோட்டை க. அன்பழகனிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது தந்தை ரவிக்கு உடல்நிலை சரியில்லாததால் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அவரைப் பாா்ப்பதற்காக புதன்கிழமை இரவு பிரகாஷ் மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டு தஞ்சாவூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அருகே வந்தபோது நிலை தடுமாறிய இவா், சாலையின் நடுவில் உள்ள சிமெண்ட் தடுப்பின் மீது மோதினாா்.

இதனால் பலத்த காயமடைந்த பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.