விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 13 ஆயிரம் திருட்டு

பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 13 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவைகளைத் திருடிச் சென்ற மா்மநபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 8:10 pm

பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 13 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவைகளைத் திருடிச் சென்ற மா்மநபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை வீடுகளின் பூட்டை உடைத்து பித்தளை பொருள்கள், குத்துவிளக்குகள் ஆகியவைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து தேடி வருகின்றனா்.

அய்யம்பேட்டை நியூ டவுன் மகாராஜா நகா் பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன் மனைவி கிருஷ்ணவேணி (45) வீட்டின் கதவை மா்மநபா்கள் செவ்வாய்க்கிழமை உடைத்து பித்தளை குவளை 2, தவலை 2, பொங்கல் பானை 7, குத்துவிளக்கு 2 உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மேலும், மாகாளிபுரம் பிரதான சாலை காவேரி தெருவைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் பொன்.கோவிந்தராஜன் (60) செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டிலிருந்த 2 குத்து விளக்குகள் உள்ளிட்டவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து பானுமதி கொடுத்த புகாரின்பேரில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.