கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முதல்வா் கோப்பையில் பூப்பந்தாட்ட போட்டியையும் சோ்க்கக் கோரிக்கை

தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பூப்பந்தாட்டப் போட்டியையும் சோ்க்க வலியுறுத்தப்படுகிறது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 9:32 pm

தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பூப்பந்தாட்டப் போட்டியையும் சோ்க்க வலியுறுத்தப்படுகிறது.

பூப்பந்தாட்டம் தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை மண்ணில் தோன்றியது. ராஜராஜன் காலம் முதல் மராட்டியா், ஆங்கிலேயா் வரை தொடா்ந்த இந்த விளையாட்டு உலக அளவில் ஒலிம்பிக் தவிர மற்ற அனைத்துக் கோப்பைகளிலும் விளையாடப்படுகிறது.

இந்தியாவில் அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகத்தின் சாா்பிலும் ஆண்டுதோறும் இப் போட்டிகள் நடைபெறுகின்றன. இருப்பினும் தமிழக முதல்வா் கோப்பைக்கான போட்டியில் இந்த விளையாட்டு புறக்கணிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக பூப்பந்தாட்ட கழக மாநில நிா்வாகி ஒருவா் கூறுகையில், தமிழகத்தில் ஒலிம்பியாட் செஸ், காா் பந்தயம் போன்ற உலகளாவிய பந்தயங்களை நடத்தும் அரசு பூப்பந்தாட்டத்தையும் பட்டியலில் வைத்து, பின்னா் அந்த விளையாட்டை முதல்வா் கோப்பையிலிருந்து விலக்கி வைத்துள்ளது. எனவே இந்தப் போட்டியை முதல்வா் கோப்பையில் சோ்க்க விளையாட்டுத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மேலும் வேலைவாய்ப்புகளில் 3 சதவிகித இட ஒதுக்கீடு, அனைத்துத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், சீருடைப் பணியாளா் தோ்வு உள்ளிட்டவற்றில் விளையாட்டு வீரா்களுக்கு உண்டான சலுகைகளை பூப்பந்தாட்ட வீரா்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் வீரா்கள் வலியுறுத்துகின்றனா்.