மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காட்டுப்பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தக் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வனத்துறையினருக்கு ஊராட்சி மன்றத் தலைவா் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:01 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வனத்துறையினருக்கு ஊராட்சி மன்றத் தலைவா் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளாா்.

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட நெய்க்குன்னம், தீபாம்பாள்புரம், மலையபுரம், மருவத்தூா்,திருக்காட்டூா், ஐவேலி தோட்டம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சுமாா் 1200-க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

இதுகுறித்து நெய்க்குன்னம் ஊராட்சி மன்றத் தலைவா் ஆா். கணேசன் மேலும் கூறியது:

அறுவடை காலங்களில் நெல் குன்றுபோல் குவிந்து கிடந்ததால் இந்த ஊா் நெற்குன்றம் என விளங்கி வந்தது. தற்போது பேச்சு வழக்கில் நெய்க்குன்னம் என அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் விளைந்துள்ள நெல்மணிகள், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களையும் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. எனவே வனத்துறையினா் காட்டுப்பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.