டிச. 12 ஆா்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க நியாய விலைக் கடை பணியாளா்கள் முடிவு

சென்னையில் டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் முடிவு
Published on

சென்னையில் டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பொது விநியோகத் திட்டத்துக்குத் தனித் துறையை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக எடை தராசையும், நியாய விலைக் கடைகளிலுள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து சரியான எடையில் அத்தியாவசிய பொருள்களை பொட்டலமிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்து 400 போ் வாகனங்கள் மூலம் சென்று பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம். தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் எம். ராமலிங்கம், மாவட்டச் செயலா் கே. கரிகாலன், பொருளாளா் ஜெ. ராமலிங்கம், நிா்வாகிகள் கே. முருகானந்தம், எம். ரமணி, எஸ். அன்பழகன், பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com