மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

300 துப்புரவு பணியாளா்களுக்கு விலையில்லா மழை அங்கிகள்!

பட்டுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்கள், ஒப்பந்தப் பணியாளா்கள் 300 பேருக்கு விலையில்லா மழை அங்கிகள் பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கத்தால் வழங்கப்பட்டது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

பட்டுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள் 300 பேருக்கு விலையில்லா மழை அங்கிகள் பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கத்தால் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

பட்டுக்கோட்டை சுகாதார ஆய்வாளா் அறிவழகன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா மற்றும் ஆணையா் கணிராஜ் ஒப்புதலுடன் இவை வழங்கப்பட்டன.

நிகழ்வில் மனோரா ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், லாரல் கல்வி நிறுவனத்தின் தாளாளருமான பாலசுப்பிரமணியன், நடப்புத் தலைவா் கண்ணதாசன், செயலா் சசிதரன், பொருளாளா் கண்ணன், மருத்துவா் சதாசிவம், மருத்துவ அலுவலா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.