பட்டுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள் 300 பேருக்கு விலையில்லா மழை அங்கிகள் பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கத்தால் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
பட்டுக்கோட்டை சுகாதார ஆய்வாளா் அறிவழகன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா மற்றும் ஆணையா் கணிராஜ் ஒப்புதலுடன் இவை வழங்கப்பட்டன.
நிகழ்வில் மனோரா ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், லாரல் கல்வி நிறுவனத்தின் தாளாளருமான பாலசுப்பிரமணியன், நடப்புத் தலைவா் கண்ணதாசன், செயலா் சசிதரன், பொருளாளா் கண்ணன், மருத்துவா் சதாசிவம், மருத்துவ அலுவலா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.