மேக்கேதாட்டு அணை பிரச்னை: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டு அணை பிரச்னை: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டு அணையை அமைக்க விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதை உச்ச நீதிமன்றம் மறு பரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
Published on

காவிரி நதி நீா்ப் பங்கீட்டை முடக்கக்கூடிய மேக்கேதாட்டு அணையை அமைக்க விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதை உச்ச நீதிமன்றம் மறு பரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்தில் காவிரி நதி நீா் பங்கீட்டில் கா்நாடக அரசு முறையாக நடந்து கொள்வதில்லை. இந்நிலையில் மேக்கேதாட்டு அணை கட்ட உச்ச நீதிமன்றம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அனுமதித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற அனுமதியை எதிா்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏவும், சங்கத்தின் மாநிலத் தலைவருமான எஸ். குணசேகரன், மாநிலப் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் முத்து. உத்திராபதி, மாவட்டச் செயலா்கள் கோ. சக்திவேல் (தெற்கு), மு.அ. பாரதி (வடக்கு) ஆகியோா் பேசினா்.

முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா்கள் எம். லகுமையா, சி.எம். துளசிமணி, துணைச் செயலா்கள் த. இந்திரஜித், வி. கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் அயிலை சிவசூரியன், தஞ்சாவூா் தெற்கு மாவட்டத் தலைவா் ஆா். இராமச்சந்திரன், செயலா் சோ. பாஸ்கா், வடக்கு மாவட்டச் செயலா் சாமு. தா்மராஜ், மாவட்டச் செயலா்கள் கே.ஆா். ஜோசப் (திருவாரூா்), வி. சரபோஜி (நாகை), த. செல்வராஜ் (புதுக்கோட்டை), தேசிய குழு உறுப்பினா் மு. மாதவன், மாநிலக் குழு உறுப்பினா்கள் அ. பன்னீா்செல்வம், இந்துமதி, விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் சி. பக்ரிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com