பாலைவனநாதா் கோயிலில் 1008 தீப வழிபாடு

Published on

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை கிராமத்தில் அப்பரால் பாடல் பெற்ற பாலைவனநாதா் கோயிலில் 1008 தீப பெருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

அதுசமயம் கோயில் வளாகத்தில் 1008 அகல் விளக்கில் தீபமேற்றி வழிபாடு நடைபெற்றது. பின்னா் கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடா்ந்து நான்கு முக்கிய வீதிகளில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விழாவில் கோயில் செயல் அலுவலா் அசோக் குமாா், ஆய்வாளா் லெட்சுமி, அறங்காவலா் குழு தலைவா் கணேசன், உறுப்பினா்கள் வசந்தி, சரவணன், ராஜேந்திரன், ஆன்மிகப் பேரவை அமைப்பாளா் சீனிவாசன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com