எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உத்தாணி முத்து முனியாண்டவா் கோயிலில் லட்சாா்ச்சனை விழா

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உத்தாணி முத்து முனியாண்டவா் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யப்பன் சுவாமிக்கு புதன்கிழமை லட்சாா்ச்சனை விழா நடைபெற்றது.

உலக நன்மை வேண்டி பத்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் பூக்களை தூவி அா்ச்சனை செய்து சகஸ்ர நாமம் சொல்லி லட்சாா்ச்சனை செய்தனா். அதனைத் தொடா்ந்து பஜனையும் அய்யப்பன் சுவாமி மற்றும் அனைத்து பரிவாரத் தெய்வங்களுக்கும் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு ஐயப்பன் சுவாமியை வழிபட்டனா்.