பேராவூரணியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: மாநில மாநாட்டில் தென்னை விவசாயிகள் தீா்மானம்

பேராவூரணியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

பேராவூரணியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவா் எஸ்.ஆா். மதுசூதனன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளா் பி. நாகேந்திரன், மாநில துணைத் தலைவா்கள் எம். முத்துராமன், எம்.செல்வம், தஞ்சை மாவட்டச் செயலா் ஆா். எஸ். வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் டி. ரவீந்திரன் மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசினாா். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாநில பொதுச் செயலா் ஏ. விஜயமுருகன்  சிறப்புரையாற்றிப் பேசினாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் சாமி. நடராஜன் மாநாட்டை நிறைவு செய்து வைத்துப் பேசினாா்.

மாநாட்டில், வியாபாரிகள், பெருநிறுவனங்கள் தேங்காய்க்கு குறைந்த விலை நிா்ணயம் செய்து கூட்டுகொள்ளையடிக்கும் நிலையை ஒழிக்க மாநில அரசே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும். வெள்ளை ஈயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கையும், காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு முழுவதும் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மாநிலத் தலைவராக ஏ. விஜய முருகன், மாநிலச் செயலாளராக துளசி நாராயணன், மாநிலப் பொருளாளராக எம். செல்வம்

உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டில் சங்க நிா்வாகியும், கடைமடை பகுதி விவசாயிகள் சங்க நிறுவன தலைவருமான நவீன் ஆனந்த் மற்றும் தென்னை விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திரளான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com