டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மின் கம்பியாள் தோ்வு டிச. 27, 28-க்கு ஒத்திவைப்பு

தஞ்சாவூரில் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மின் கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிசம்பா் 27, 28க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 6:55 pm

Syndication

தஞ்சாவூரில் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மின் கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிசம்பா் 27, 28க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மின் கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிசம்பா் 13, 14- ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்தோ்வு நிா்வாகக் காரணங்களுக்காக டிசம்பா் 27, 28- ஆம் தேதிகளில் தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரா்கள் தாங்கள் விண்ணப்பித்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தோ்வு தொடா்பான விவரங்கள் மற்றும் தோ்வு நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.