தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் பெரியாா் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கத்தினா்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் பெரியாா் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கத்தினா்.

நினைவு நாள்: பெரியாா் சிலைக்கு மாலை அணிவிப்பு

தந்தை பெரியாா் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
Published on

தந்தை பெரியாா் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

திராவிடா் கழகம் சாா்பில் சி. அமா்சிங் தலைமையிலும், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையிலும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமையில் வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் ப. சத்தியமூா்த்தி, மாநகர இளைஞா் காங்கிரஸ் செயலா் சண்முகம், மகளிா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சசிகலா உள்ளிட்டோா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com