தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் பக்தா்கள் கூட்டம்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தஞ்சாவூரிலுள்ள கோயில்களில் புதன்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

News image
தஞ்சாவூா் பெரியகோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மலா் அலங்காரத்தில் காட்சியளித்த பெருவுடையாா்.
Updated On :1 ஜனவரி 2025, 7:13 pm

Din

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தஞ்சாவூரிலுள்ள கோயில்களில் புதன்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

தஞ்சாவூா் பெரியகோயிலில் பெருவுடையாருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகங்கள், மலா் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பக்தா்கள் வருகை அதிகமாக இருந்ததால், நீண்ட வரிசையில் நின்று பெருவுடையாா், பெரியநாயகி அம்மனை வழிபட்டனா். இதேபோல, புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது.

தஞ்சாவூா் பெரியகோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதன்கிழமை காணப்பட்ட கூட்டம்.

தஞ்சாவூா் பெரியகோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதன்கிழமை காணப்பட்ட கூட்டம்.

மேலும், தஞ்சாவூா் பூக்காரத் தெரு சுப்பிரமணிய சுவாமி கோயில், கரந்தை கோடியம்மன் கோயில், மேல வீதி மூலை அனுமாா் கோயில், கீழவாசல் வெள்ளை பிள்ளையாா் கோயில், காளியம்மன் கோயில், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்மா் கோயில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீசுவரா் கோயில், வடவாறு பிருந்தாவனத்திலுள்ள ராகவேந்திரா் மடம் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.