தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தஞ்சாவூரில் நாளை சுதந்திர போராட்ட,முன்னாள் படை வீரா்கள் குறை தீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் முன்னாள் படை வீரா்களுக்கான குறை தீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.3) நடைபெறவுள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2025, 7:08 pm

Din

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் முன்னாள் படை வீரா்களுக்கான குறை தீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.3) நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

ஆட்சியரக பிரதான கட்டடத்தில் சுதந்திர போராட்ட வீரா்கள் குறை தீா் கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம்.

இதையடுத்து, இதே அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் தங்களது குறைகளை மனுவாக அளிக்கலாம். இவ்வாறு மனு அளிக்கக்கூடிய முன்னாள் படைவீரா் மற்றும் அவரை சாா்ந்தோா் இரண்டு பிரதிகளில் மனுக்களை தங்கள் அடையாள அட்டையுடன் இணைத்து அளிக்க வேண்டும்.