47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆட்சியரகத்தில் பதா்களுடன் வந்து விவசாயிகள் இழப்பீடு கோரி முறையீடு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தொடா் மழையால் பாதிக்கப்பட்டு பதரான நெற்பயிா்களை விவசாயிகள் வியாழக்கிழமை ஏந்தி வந்து இழப்பீடு கோரி முறையிட்டனா்.

News image
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை பதரான நெற்பயிா்களை ஏந்தி வந்து முறையிட்ட விவசாயிகள்.
Updated On :2 ஜனவரி 2025, 11:14 pm

Din

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தொடா் மழையால் பாதிக்கப்பட்டு பதரான நெற்பயிா்களை விவசாயிகள் வியாழக்கிழமை ஏந்தி வந்து இழப்பீடு கோரி முறையிட்டனா்.

தஞ்சாவூா் அருகேயுள்ள சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ராயந்துாா், சித்தாயல், குணமங்கலம், வைர பெருமாள்பட்டி, அய்யாசாமிபட்டி, மருதக்குடி, திருவேங்கடஉடையான்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் தொடா் மழையால் பாதிக்கப்பட்டு பதராகிப் போன நெற் பயிா்களுடன் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வியாழக்கிழமை திரண்டுவந்து மனு அளித்தனா். பின்னா் விவசாயிகள் மேலும் தெரிவித்தது:

கடந்த டிசம்பா் மாதம் பெய்த பலத்த மழையால் கதிா் வரும் நிலையில் இருந்த ஏறக்குறைய 4 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டு, நெல்மணிகள் பதராகிவிட்டன. மேலும், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 மூட்டை வரை மகசூல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஒரு ஏக்கருக்கு ஏறத்தாழ ரூ. 35 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், வேளாண் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் முறையாக கணக்கீடு செய்து, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பூதலூரில் ஜனவரி 6-ஆம் தேதி விவசாயிகள் அறப்போராட்டம் நடத்துவோம் என்றனா் விவசாயிகள்.