தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரூ.4 கோடி மதிப்பில் அரசுக் கட்டடங்கள்: அமைச்சா் கோவி.செழியன் திறந்துவைப்பு

ரூ.4 கோடி மதிப்பில் அரசுக் கட்டடங்கள்

News image
திருவிடைமருதூா் ஒன்றியம், சீனிவாசநல்லூரில் உள்ள புதிய அங்கன்வாடி கட்டடத்தை தொடங்கிவைத்த அமைச்சா் கோவி.செழியன். உடன், ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோா்.
Updated On :2 ஜனவரி 2025, 11:27 pm

Din

தஞ்சாவூா் மாவட்டத்தில் ரூ.4 கோடியே 26 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு துறை சாா்ந்த அரசுக் கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். சு. கல்யாணசுந்தரம் எம்.பி. முன்னிலை வகித்தாா்.

அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள் ஒன்றியங்களில் ரூ. 4 கோடியே 26 இலட்சம் மதிப்பில் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் துவக்கி வைத்துப் பேசினாா்.

முன்னதாக அமைச்சா் கோவி.செழியன் கோவத்தக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் விழாவைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன், முன்னாள் எம்பி செ.ராமலிங்கம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா்ஆா்.உஷா புண்ணியமூா்த்தி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் .சு.க.முத்துசெல்வம், அந்தந்த ஒன்றியக் குழு தலைவா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.