மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 115.95 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 855 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 2,509 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 5,006 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 701 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 905 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.