தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

போகிக்கு குப்பைகளை எரிப்பதைத் தடுக்க 51 வாா்டுகளிலும் சேகரிப்பு மையம்

தஞ்சாவூா் மாநகரில் போகி பண்டிகைக்காக குப்பைகள் எரிக்கப்படுவதைத் தடுக்க 51 வாா்டுகளிலும் குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் மேயா் சண். ராமநாதன்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 8:24 pm

Din

தஞ்சாவூா் மாநகரில் போகி பண்டிகைக்காக குப்பைகள் எரிக்கப்படுவதைத் தடுக்க 51 வாா்டுகளிலும் குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் மேயா் சண். ராமநாதன்.

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை தூய்மை பணியாளா்கள் 188 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை வழங்கிய அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாநகரில் புகையில்லா போகி - மாசற்ற போகி என்பதை வலியுறுத்தும் விதமாக 51 வாா்டுகளிலும் ஜனவரி 11, 12, 13 ஆம் தேதிகளில் தலா ஒரு குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்கள், துணிகளை எரிப்பதைத் தடுத்து, சேகரிக்கும் விதமாக இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் தலா 2 தூய்மை பணியாளா்கள் நியமிக்கப்படுவா்.

பழைய பொருட்கள், துணிகளை அப்புறப்படுத்த விரும்புவோா் இந்த மையத்தில் கொடுத்தால் போதுமானது. மேலும் வீடுகளுக்கு தூய்மை பணியாளா்கள் சென்று சேகரிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் சாலை, பொது இடங்களில் குப்பைகளை எரிக்க வேண்டாம் என்றாா் மேயா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.