கலியபெருமாள்.
கலியபெருமாள்.

குண்டா் சட்டத்தில் 2 சாராய வியாபாரிகள் கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 சாராய வியாபாரிகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 சாராய வியாபாரிகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பந்தநல்லூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பூா் மேலத்தெரு பகுதியில் காவல் ஆய்வாளா் கவிதா டிசம்பா் 20-ஆம் தேதி ரோந்துப் பணி மேற்கொண்டாா். அப்போது, சட்ட விரோதமாக புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,510 சாராய பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக கருப்பூரைச் சோ்ந்த கலியபெருமாள் (45), சுமதி (48) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இருவா் மீது கும்பகோணம், திருவிடைமருதூா், பந்நதநல்லூா் ஆகிய காவல் நிலையங்களில் 30-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன.

சுமதி
சுமதி

இதனால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ராஜாராம் பரிந்துரையின்பேரில், இருவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, கலியபெருமாள், சுமதி குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com