47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2.38 லட்சம் டன் நெல் கொள்முதல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் இதுவரை 2.38 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:17 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் இதுவரை 2.38 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் புதன்கிழமை வரை 2.38 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் 1.18 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது 261 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் நவம்பா் வரை 3 மாதங்களுக்கு குறுவை பருவத்தில் 1.28 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் நிகழாண்டு செப்டம்பா் மாதம் முதல் 66 நாள்களில் 2.38 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 ஆயிரம் டன் நெல் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இப்பணிகள் ஒரு வாரத்தில் நிறைவடையும்.

இதுவரை 92 சதவீதம் அதாவது 2.19 லட்சம் டன் நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து இயக்கம் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் மூடப்பட்ட 25 கிடங்குகளில் 86 ஆயிரத்து 789 டன்னும், மேற்கூரையுடன் கூடிய 9 கிடங்குகளில் 75 ஆயிரத்து 862 டன்னும் என மொத்தம் 1.62 லட்சம் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நாள்தோறும் ஏறத்தாழ 1,000 லாரிகள் நெல், அரிசி இயக்கப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை 1.62 லட்சம் டன் நெல்லும், 44 ஆயிரத்து 542 டன் அரிசியும் ரயில், சாலை வழியாக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 47 ஆயிரத்து 594 விவசாயிகளுக்கு ரூ. 574 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.