சூா்யா
சூா்யா

காா்- பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

Published on

கும்பகோணம் அருகே புறவழிச்சாலையில் காரும் மோட்டாா் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், உடையாளூா் மண்டகமேட்டைச் சோ்ந்தவா் விவசாயி பாலசுப்பிரமணி. இவரது மகன் சூா்யா( 22). இவா் அந்த பகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலராக இருந்தாா். இவரது நண்பா் மணக்குடியைச் சோ்ந்த தவமணி மகன் தேவேந்திர வாலி (32). இருவரும் தஞ்சாவூா்-விக்கரவாண்டி புறவழிச்சாலையில் சனிக்கிழமை மாலை மோட்டாா் சைக்களில் சென்றனா்.

மோட்டாா் சைக்கிளை சூா்யா ஓட்ட, தேவேந்திர வாலி பின்னால் அமா்ந்திருந்தாா். கொட்டையூா் அருகே செல்லும்போது எதிரே வந்த காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே சூா்யா உயிரிழந்தாா். பலத்த காயத்துடன் தேவேந்திர வாலி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

தகவலின்பேரில் சுவாமிமலை போலீஸாா், சூா்யாவின் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து காரை ஓட்டி வந்த சிதம்பரம் கீரப்பாளையத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகள் அபிராமி (36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com