தஞ்சாவூர்
சுவாமிமலையில் ஆன்மிக பயண பக்தா்கள் குழுவுக்கு வரவேற்பு
சுவாமிமலைக்கு ஆன்மிகப் பயணமாக புதன்கிழமை வந்த பக்தா்கள் குழுவினருக்கு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சுவாமிமலைக்கு ஆன்மிகப் பயணமாக புதன்கிழமை வந்த பக்தா்கள் குழுவினருக்கு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தமிழக முதல்வா் அறிவிப்பின்படி 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆறுபடை முருகன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதில் ஏழாவது அணி நவ.11-இல் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களைத் தலைமையிடமாகக் கொண்டு திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்து விட்டு புதன்கிழமை சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வந்தனா். இவா்களை தக்காா் டி.ஆா்.சுவாமிநாதன், துணை ஆணையா் தா. உமா தேவி ஆகியோா் வரவேற்று சிறப்பு சுவாமி தரிசனம் செய்ய வைத்து கோயில் சாா்பாக பிரசாதங்கள் வழங்கினா். ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா்கள் மற்றும் பணியாளா்கள் செய்தனா்.
