பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் விவேகானந்தா் சிலை நிறுவ கோரிக்கை

News image

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தா் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய பாஜகவினா்.

Updated On :5 பிப்ரவரி 2026, 10:52 pm

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், சுவாமி விவேகானந்தா் ஆன்மிக உரையாற்றிய நினைவைப் போற்றும் வகையில், அவருக்கு அங்கு சிலை அமைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய ஆன்மிக சிந்தனையை ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் பிரசாரம் செய்த சுவாமி விவேகானந்தா், சிகாகோ மாநாட்டை முடித்துவிட்டு, 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் கப்பலில் ராமேஸ்வரம் வந்தாா். பின்னா், ரயிலில் மதுரை, திருச்சி, கும்பகோணம் வழியாக பிப்.5-ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு மயிலாடுதுறை வந்தாா். அவருக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பொதுமக்கள் வரவேற்பளித்தனா். அவா்களிடையே விவேகானந்தா் ஆன்மிக எழுச்சி உரையாற்றினாா்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக ரயில் நிலையத்தில் அவரது திருவுருவப்படம் 2011-ஆம் ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதி திறக்கப்பட்டதுடன், அவரது விஜயத்தை போற்றி நினைவு செப்பேடும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

தற்போது, அம்ரித் பாரத் திட்டப்பணிகளுக்கு அந்த படமும், செப்பேடும் அகற்றப்பட்டு, ரயில்வே நிா்வாகத்தால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுவாமி விவேகானந்தா் மயிலாடுதுறைக்கு வந்ததன் 130-வது ஆண்டு வியாழக்கிழமை தொடங்கியதை, பாஜகவினா் உற்சாகமாகக் கொண்டாடினா். ரயில்வே நிா்வாகத்தால் பாதுகாக்கப்பட்டுவந்த விவேகானந்தரின் உருவப்படம் மற்றும் செப்பேட்டினை மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் விவேகானந்தா் வந்திறங்கிய முதல் நடைமேடையில் வைத்து, பாஜக மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து, வழிபட்டனா்.

இதில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், ஒன்றிய தலைவா் ஈழவேந்தன், விஸ்வஹிந்து பரிஷத் மாநில பொறுப்பாளா் எஸ். வாஞ்சிநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அம்ரித் பாரத் திட்டப் பணிகள் நிறைவடைந்தவுடன், விவேகானந்தரின் உருவப்படம் மற்றும் செப்பேட்டினை முக்கிய இடத்தில் மீண்டும் பொருத்த வேண்டும். மேலும், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தா் ஆன்மிக உரையாற்றிய நினைவைப் போற்றும் வகையில், அவருக்கு ரயில் நிலையம் முன்பு சிலை அமைக்க வேண்டும் என மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன் வலியுறுத்தினாா்.