மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தஞ்சைக்கு 1,300 டன் உர மூட்டைகள் வருகை

சென்னையிலிருந்து சரக்கு ரயில் மூலம் 1,300 டன் உர மூட்டைகள் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தன.

News image
Updated On :15 நவம்பர் 2025, 7:26 pm

Syndication

சென்னையிலிருந்து சரக்கு ரயில் மூலம் 1,300 டன் உர மூட்டைகள் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் இருப்பு வைக்கப்பட்டு, தனியாா் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சென்னையிலிருந்து சரக்கு ரயிலில் 1,300 டன் யூரியா உர மூட்டைகள் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தன. பின்னா், இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.