திருவையாறில் விருது வழங்கும் விழா

திருவையாறில் விருது வழங்கும் விழா

Published on

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் பாரதி பவுண்டேஷன் வெள்ளி விழா ஆண்டு தொடக்க நிகழ்ச்சி, சமூகச் செயற்பாட்டாளா் இரா. மோகன் நினைவு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பாரதி பவுண்டேஷன் நிா்வாக அறங்காவலா் நா. பிரேமசாயி தலைமை வகித்தாா். இதில், மகாகவி பாரதியின் கருத்துகளை 47 ஆண்டுகளாக சமூகத்தில் பரவச் செய்து வரும் பி. ராஜராஜனுக்கு, இரா. மோகன் நினைவு விருதை திருவையாறு இசைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வா் இராம. கௌசல்யா வழங்கி கெளரவித்தாா்.

திருவையாறு ஐயாறப்பா் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் பொதுச் செயலா் இரா. குணசேகரன், காவிரி பாரம்பரிய மைய இயக்குநா் சாமி. சம்பத்குமாா், பாரதி இலக்கியப் பயிலகத் துணை இயக்குநா் கோ. ஸ்ரீதரன், திருவையாறு பாரதி இயக்க அறக்கட்டளைச் செயலா் தி.ச. சந்திரசேகரன், இளையோா் திறன் வளா் மைய இயக்குநா் குப்பு. வீரமணி, திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமத் தலைவா் எம். சுவாமிநாதன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

பாரதி பவுண்டேஷன் செயலா் நீ. சீனிவாசன் வரவேற்றாா். பாரதி இயக்கச் செயலா் குணா ரஞ்சன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com