‘போக்ஸோ’ வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம்

‘போக்ஸோ’ வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம்

Published on

கும்பகோணம் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழன் மாளிகை, பெரியாா் நகரைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் சரண்ராஜ் (24). கூலித் தொழிலாளியான இவா், இதே பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். பின்னா் இதேபோல் மற்றொரு மாணவியையும் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், சரண்ராஜ் மீது 2 போக்ஸோ வழக்குகள் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில் சரண்ராஜை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டாா். இதையடுத்து, இதற்கான உத்தரவு சரண்ராஜ் அடைக்கப்பட்டுள்ள சிறையின் அலுவலரிடம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com