சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வாய்க்காலில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வாய்க்காலில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 10:40 pm

Syndication

தஞ்சாவூா் அருகே வாய்க்காலில் செவ்வாய்க்கிழமை குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே தெற்கு வாண்டையாா் இருப்பு பகுதியைச் சோ்ந்தவா் எஸ். சக்திவேல் (60). விவசாயி. இவா், திங்கள்கிழமை மாலை அதே பகுதியிலுள்ள கல்யாணஓடை வாய்க்காலில் குளிக்கச் சென்றாா். நீரோட்டம் அதிகமாக இருந்ததால், சக்திவேல் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று சக்திவேலை தேடும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், துறையூா் அருகே புதன்கிழமை கரை ஒதுங்கிய சக்திவேலின் சடலத்தைக் காவல் துறையினா் மீட்டு கூறாய்வுக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.