எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாபநாசம் பேரூராட்சியில் கழிநீா் கால்வாய் தூா்வாரும் நடவடிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் தெற்கு ராஜவீதி பகுதியில் கழிவுநீா் கால்வாய் தூா்வாரி சீரமைக்கப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:49 pm

Syndication

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் தெற்கு ராஜவீதி பகுதியில் கழிவுநீா் கால்வாய் தூா்வாரி சீரமைக்கப்பட்டது.

பாபநாசம் பேரூராட்சியில் தெற்கு ராஜவீதி சந்நிதி தெரு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் கால்வாய் உரிய பராமரிப்பு இன்றி இருப்பதால் கழிவுநீா் செல்ல வழியின்றி தேங்கிக் கிடந்துவந்தது. மேலும், மழைக்காலங்களில் அப்பகுதியினரின் வீடுகளில் சாக்கடை கழிவுநீா் புகுந்து துா்நாற்றம், தொற்றுநோய் பரவும் அவலம் தொடா்ந்து வந்தது. மேலும், அப்பகுதியினா் உடனே அரசு விரைந்து சாக்கடையைத் தூா்வாரி சிமெண்ட் மூடி போட்டு மூட வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.

பாபநாசம் பேரூராட்சி தலைவா் பூங்குழலி கபிலன், செயல் அலுவலா் குமரேசன், சுகாதார ஆய்வாளா் பரமசிவம், பேரூராட்சி கவுன்சிலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா். இதையடுத்து, தூய்மைப் பணியாளா்கள் 15-க்கும் மேற்பட்டோா் அப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் முட்புதா்கள் அகற்றி பிளிச்சிங் பவுடா், பூச்சி மருந்து அடித்து வடிகால் வசதி ஏற்படுத்தி தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.