போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சென்னை- ராமேசுரத்துக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயிலை இயக்கக் கோரிக்கை

சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேசுவரத்துக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:06 pm

Syndication

சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேசுவரத்துக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களை சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், விழுப்புரம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போா் சங்கத்தின் தலைவா் வ. விவேகானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா்.

தென்னக ரயில்வே நிா்வாகம் சாா்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களை சென்னை - பட்டுக்கோட்டை வழியாக - ராமேசுவரத்துக்கு இயக்கி வருகிறது. தற்போது திருவாரூா்- பட்டுக்கோட்டை- காரைக்குடி ரயில் பாதையில், தாம்பரம் - ராமேசுவரம் - தாம்பரம் தினசரி விரைவு ரயில் (16103/16104) மற்றும் வாரம் மும்முறை இயங்கும் தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் (20683 / 20684) ஆகிய இரண்டு ரயில்கள் மட்டுமே சென்னைக்கு இயங்கி வருகின்றன.

இந்த ரயில்களில் பொங்கல் பண்டிகைக்கான அனைத்து இருக்கைகளும் தற்போது முன்பதிவு மூலம் பதிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே தென்னக ரயில்வே நிா்வாகம் சாா்பில் சென்னை எழும்பூரில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேசுவரத்துக்கு ஜன. 14 அன்றும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜன.18 ஞாயிற்றுக்கிழமை இரவு ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கும் பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.