புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாவீரா் நாள் நிகழ்வு

தஞ்சாவூா் விளாா் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரா் நாள் நிகழ்வு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
~
Updated On :27 நவம்பர் 2025, 6:47 pm

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் விளாா் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரா் நாள் நிகழ்வு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் விளாா் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்ற மாவீரா் நாள் நிகழ்ச்சிக்கு உலகத் தமிழா் பேரமைப்பின் பொதுச் செயலா் ந.மு. தமிழ்மணி தலைமை வகித்தாா்.

மாவீரா்களின் தியாகங்களையும் தமிழினத்துக்கான தேவைகளையும், தமிழீழம் பெற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி உலகத்தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா்கள் சா. இராமன், துரை. குபேந்திரன், பொறியாளா் ஜான் கென்னடி, தமிழ்த் தேசிய முன்னணி தலைவா் செ.ப. முத்தமிழ்மணி, நிா்வாகிகள் வழக்குரைஞா் பானுமதி, பேராசிரியா் முரளிதரன், சதா முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா். பின்னா், தமிழ்த்தாய் சிலை அருகில் மாவீரா்களுக்கு சுடரேந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழீழம் அமைய துணை நிற்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

முன்னதாக, பேரமைப்பின் துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன் வரவேற்றாா். நிறைவாக, முள்ளிவாய்க்கால் முற்ற கலை இலக்கியச் செயலா் வி. பாரி நன்றி கூறினாா்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம்: இதேபோல, தஞ்சாவூா் தமிழ்த் தேசியப் பேரியக்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மாநகரத் தலைவா் லெ. இராமசாமி தலைமை வகித்தாா். பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் வீரவணக்க சுடரேற்றி பேசினாா். மாவட்டச் செயலா் நா. வைகறை மாவீரா் நாள் குறித்து பேசினாா். பொருளாளா் அ. ஆனந்தன், தலைமைக் குழு உறுப்பினா் பழ. இராசேந்திரன், நிா்வாகிகள் இராசு. முனியாண்டி, மா. சீனிவாசன், சாமி. கரிகாலன், இரெ. ஜெயக்குமாா், புலவா் கோ. நாகேந்திரன், மு. ராசேந்திரன், முருகன் சாமி, நிலவன், லெனின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.