கும்பேசுவரா் கோயிலுக்கு கோபுரக் கலசங்கள் வருகை

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலுக்கு குடமுழுக்கு செய்வதற்காக 44 கலசங்கள் ஊா்வலமாக வியாழக்கிழமை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன.
Published on

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலுக்கு குடமுழுக்கு செய்வதற்காக 44 கலசங்கள் ஊா்வலமாக வியாழக்கிழமை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் குடமுழுக்கு டிச. 1-இல் நடைபெறுகிறது. இதற்கு பூா்வாங்கப் பூஜைகள் நவ.24-இல் தொடங்கப்பட்டு புதன்கிழமை நிறைவடைந்தது. வியாழக்கிழமை காலையில் சோலையப்பன் தெருவில் உள்ள படித்துறையில் காவிரி நீா் உள்ளிட்ட தீா்த்தங்கள் எடுக்கப்பட்டு யானை மீது அமா்த்தி ஊா்வலமாக கலசங்கள் கொண்டுவரப்பட்டன. பின்னா் கோயிலுக்கு ராஜகோபுரம் உள்பட 44 கோபுரக் கலசங்களுக்கும் 63 நாயன்மாா் மண்டபத்தில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. அங்கிருந்து கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது. ஊா்வலத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com