தஞ்சாவூர்
மும்மூா்த்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு
ஆடுதுறை மருத்துவக்குடியில் மும்மூா்த்தி விநாயகா் என்ற மகா கணபதி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆடுதுறை மருத்துவக்குடியில் மும்மூா்த்தி விநாயகா் என்ற மகா கணபதி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
புதன்கிழமை அனுக்ஞை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி வீரசோழன் ஆற்றில் புனித நீா் ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை விக்னேஷ்வரபூஜையுடன் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னா் விமான விநாயகா் குடமுழுக்கு, மும்மூா்த்தி விநாயகா் என்ற மகாகணபதிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இரவு விநாயகா் வீதியுலா சென்றாா். ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத் தலைவரும், ஆடுதுறை பேரூராட்சித் தலைவருமான ம.க.ஸ்டாலின் மற்றும் கமிட்டியினா் செய்தனா்.
