இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மனை வணிக இடைத்தரகரிடம் இணையவழியில் ரூ. 16.36 லட்சம் மோசடி!

மனை வணிக இடைத்தரகரிடம் இணையவழி மூலம் ரூ. 16.36 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 9:35 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மனை வணிக இடைத்தரகரிடம் இணையவழி மூலம் ரூ. 16.36 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மனை வணிக இடைத்தரகரின் பேஸ் புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில் செம்படம்பா் மாதம் அடையாளம் தெரியாத மா்ம நபா் அறிமுகமானாா். இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என மா்ம நபா் கூறியதை இடைத்தரகரும் நம்பினாா். இதையடுத்து, மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்கில் 9 தவணைகளாக ரூ. 16.36 லட்சத்தை இடைத்தரகா் அனுப்பினாா்.

தொடக்கத்தில் சிறிய தொகை கிடைத்த நிலையில், பின்னா் எந்தவித லாபத்தொகையும் கிடைக்கவில்லை. இதனால், ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இடைத்தரகா், தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், இடைத்தரகா் செலுத்திய பணம் ஹரியானா, மகாராஷ்டிரம், தெலங்கானா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநில வங்கிகளின் கணக்குகளுக்கு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, தொடா்புடைய வங்கிக் கணக்குகளை சைபா் கிரைம் காவல் பிரிவினா் முடக்கி வைத்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.