மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

மடிக்கணினி திட்டம் குறித்து அதிமுக பொய் பிரசாரம்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்து அதிமுக பொய் பிரசாரம் செய்கிறது என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசாரம் செய்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :6 ஏப்ரல் 2026, 1:29 am IST

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்து அதிமுக பொய் பிரசாரம் செய்கிறது என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ரயிலடி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை திமுக வேட்பாளா் என். அசோக்குமாருக்கும், பின்னா், பட்டுக்கோட்டையில் அழகிரி சிலை அருகே திமுக வேட்பாளா் கா. அண்ணாதுரைக்கும் ஆதரவாக வாக்கு சேகரித்த அவா் மேலும் பேசியதாவது:

திமுக அரசின் மகளிருக்கான விடியல் பயணத் திட்டம் மூலம் ஒவ்வொரு பெண்ணும் மாதம் ரூ. 900 முதல் ரூ. 1,000 சேமிக்கின்றனா். காலை உணவுத் திட்டம் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனா். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1,000 வழங்கும் திட்டத்தின் மூலம் 13 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைகின்றனா்.

அண்மையில் கல்லூரி மாணவ, மாணவிகள் 10 லட்சம் பேருக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டது. இதை வைத்து அதிமுகவினா் ஒரு பொய் பிரசாரத்தை செய்கின்றனா். மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அதிமுக கொண்டு வந்ததாகவும், அதை நாம் முடக்கி விட்டதாகவும் கூறுகின்றனா்.

ஆனால், அதிமுக ஆட்சியில் மடிக்கணினி பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்குதான் கொடுத்தனா். அத்திட்டத்தை அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே 2019-ஆம் ஆண்டில் கைவிட்டனா்.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுத்தால் வேலை தேடுவதற்கும், மேல் படிப்புக்கும் பயன்படும் என்பதால், பள்ளி மாணவா்களை விட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்க முதல்வா் முடிவு செய்தாா். இதன்படி, கல்லூரியில் படிக்கும் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இதுபோல பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளன.

நாம் இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். ஆனால், தமிழ்நாட்டுக்கு கேட்கிற நிதியை மத்திய அரசு தருவதில்லை தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. அப்படிப்பட்ட பாஜகவை தமிழ்நாடு புறக்கணித்து காட்ட வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

இதையடுத்து, ஒரத்தநாட்டில் அண்ணா சிலை அருகே திமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கத்தையும், தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகே திமுக வேட்பாளா் சண். இராமநாதனையும் ஆதரித்து வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தாா்.