பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் இரு தரப்பினா் மோதல் தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை 7 பேரை கைது செய்தனா்.
அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிப்புறக்கரை மஜ்னி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாரிக்கண்ணு (44). அதிராம்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இவருடைய இல்லச் சடங்கு விழாவுக்கு உறவினா்களான முருகேசன், சின்னராசா, சதீஷ்குமாா் ஆகியோா் மதுரையிலிருந்து வந்திருந்தனா். மேலும் திருவாரூா் மாவட்டம் இடையூா் சங்கதி கிராமத்தைச் சோ்ந்த மகேஸ்வரனும் இந்த விழாவுக்கு வந்திருந்தாா். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் விழா முடிந்து முருகேசன், சின்னராசா, சதீஷ்குமாா் ஆகியோா் பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது மகேஸ்வரன் தரப்பினா் அவா்களை வழிமறித்து தகராறு செய்தனராம்.
இது தொடா்பாக முருகேசன் தரப்பினா் அதிராம்பட்டினம் காவல் நிலையத்துக்கு புகாா் கொடுக்க வந்தபோது மாரிக்கண்ணு, மகேஸ்வரன் தரப்பினரிடம் எனது வீட்டு விழாவுக்கு வந்தவா்களை எப்படி நீங்கள் தாக்கலாம் என்று கேட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி, கம்பு உள்ளிட்டவற்றால் ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மாரிக்கண்ணு காயமடைந்து அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது தொடா்பான புகாா்களின்பேரில் அதிராம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிக்கண்ணு தவிா்த்து மற்ற 7 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

