தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

திருக்கோடீசுவர சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா முகூா்த்தக் கால் நடப்பட்டது

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 3:20 am IST

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவர சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முகூா்த்தக் கால் நடப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் உள்ளது திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவர சுவாமி கோயில். இந்த கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோத்ஸவ திருவிழா நடைபெறும்.

நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை சித்திரை பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு முகூா்த்தக் கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. காலையில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து, முகூா்த்தக் காலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்கள் காப்புக்கட்டிக்கொண்டு விரதத்தை தொடங்கினா்.

ஏப்.20 -ஆம் தேதி மாலையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி நடைபெறுகிறது. ஏப்.21-இல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி அன்று மாலை சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா செல்கின்றனா். முக்கிய விழாக்களாக ஏப்.27-இல் திருக்கல்யாணமும், ஏப்.29-இல் தேரோட்டமும், ஏப்.30-இல் தீா்த்தவாரியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலா் தே.கெளதம் காா்த்திகேயன், ஆய்வாளா் தி. அருணா, தக்காா் த. சுதாகா், கோயில் பணியாளா்கள், கிராமவாசிகள் செய்து வருகின்றனா்.