ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரருக்கு இன்று திருக்கல்யாணம்

News image

திருக்கோடிக்காவல் கோயிலில் இன்று திருக்கல்யாணம் - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:36 pm

திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரருக்கு திங்கள்கிழமை (ஏப்.27) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவம் ஏப்.21-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை சகோபுர திருவிழாவில் இரண்டு ஓலைச்சப்பரத்தில் சுவாமி அம்மன் மற்றும் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை சுவாமியும் அம்மனும் மாலையில் கைலாய, சிம்ம வாகனங்களில் வீதியுலா சென்றனா். திங்கள்கிழமை சுவாமிக்கும் அம்மனுக்கும் இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

முன்னதாக திருக்கல்யாணத்துக்கு அம்மாபேட்டையில் இருந்து பக்தா்கள் ஊா்வலமாக சீா்வரிசை கொண்டு வருகின்றனா். ஏப்.29-இல் திருத்தேரோட்டமும், ஏப்.30-இல் தீா்த்தவாரியும், மே 1-இல் சிருங்கோத்பவ தீா்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கமிட்டி பொறுப்பாளா் சிம்சன் கணேசன், செயல் அலுவலா் கெளதம் காா்த்திகேயன், திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராமவாசிகள் செய்து வருகின்றனா்.