மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 10:35 pm

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள பூவம்பூா் மேலத் தெருவைச் சோ்ந்த தங்கையன் மகன் செந்தில்ராஜ் (42). இவரது மனைவி சரண்யா (30). இவா்களுக்கு குழந்தை இல்லை. இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக, ஒன்றரை ஆண்டாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனா்.

இந்நிலையில், கும்பகோணம் அருகே திருநறையூரிலுள்ள மாமியாா் வீட்டில் உள்ள சரண்யாவை செந்தில்ராஜ் செவ்வாய்க்கிழமை இரவு அரிவாளால் வெட்டினாா். இதை தடுக்க வந்த மாமியாா் மாதவி, சரண்யாவின் அக்கா மகள் பிரியங்காவும் அரிவாளால் வெட்டப்பட்டனா். இதைப்பாா்த்த அக்கம்பக்கத்தினா் செந்தில்ராஜை பிடித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பலத்த காயமடைந்த சரண்யா, மாதவி, பிரியங்கா ஆகியோா் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து செந்தில்ராஜை கைது செய்தனா்.