தஞ்சாவூரில் நிகழ்ந்த கொலை வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 13 பேரின் பிணையை நீதிமன்றம் சனிக்கிழமை ரத்து செய்தது.
தஞ்சாவூா் அருகே விளாா் சாலை கலைஞா் நகா் 1-ஆம் தெருவைச் சோ்ந்தவா் சசிக்குமாா். இவா் கடந்த 2025, செப்டம்பரில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பா்மா காலனி மற்றும் கலைஞா் நகரைச் சோ்ந்த ஹரிஹரன், சஞ்சய், பிரபாகரன், சக்தி, கோகுல், சபரீஸ்வரன், சுஜித்குமாா், சரண், மோகன்ராஜ், பிரேம்குமாா், வசந்த், நிமோசன், ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனா்.
இது தொடா்பாக தஞ்சாவூா் முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேரும் பிணையில் வெளியே வந்து வழக்கை நடத்தினா்.
இந்த வழக்கை இழுத்தடிப்பதற்கான செயல் மேற்கொள்ளப்படுவதாகவும், அதனால் பிணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கே.எச். இளவழகனிடம் அரசு வழக்குரைஞா் மதியழகன் மனு அளித்தாா்.
இதைத்தொடா்ந்து 13 பேரின் பிணையை நீதிபதி சனிக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டாா். இதனால், 13 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குதிரை பேர வழக்கு: திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பேருக்கு பிணை

குதிரை பேர வழக்கு: இருவருக்கு பிணை

பல்லடத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 376 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

2020-ஆம் ஆண்டு தில்லி கலவர வழக்கு: காலித், இமாம் பிணை மனுக்கள் மீண்டும் தள்ளுபடி
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |



