கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூா் ஆகிய பகுதிகளில் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா.ரேவதி.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மண்டலத்தில் 310 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதுவரை 2.72 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகளவு வரத்து காரணமாக கும்பகோணம், திருவிடைமருதூா் மற்றும் பாபநாசம் ஆகிய பகுதிகளில் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
அதற்காக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தினசரி 10 ஆயிரம் மெட்ரிக் டன் இயக்கம் மேற்கொள்ள சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரவை முகவா்களுக்கு 3 ஆயிரம் மெட்ரிக் டன், சேமிப்பு மையங்களுக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன், வெளி மண்டலங்களுக்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன் என ஒதுக்கீடு செய்யப்பட்டு நாள்தோறும் 550 முதல் 600 லாரிகள் இயக்கப்பட்டு விரைவாக இயக்கம் செய்யப்படுகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 1.70 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டதில் 1.25 லட்சம் மெட்ரிக் டன் இயக்கம் செய்யப்பட்டுவிட்டது.
தஞ்சாவூா் மண்டலத்தில் உள்ள 45 சேமிப்பு மையங்களில் 1.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் வகையில் போதுமான இடவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழைக்காலத்தை முன்னிட்டு போதிய தாா்பாய்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இரவு நேர கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோடை குறுவை பருவத்தில் இதுவரை 47,740 விவசாயிகளுக்கு ரூ.683 கோடி நெல் கொள்முதல் தொகை மின்னணு பரிவா்த்தனை மூலம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் நிலையங்களில் இயக்கம் தாமதம்: போராட முடிவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.50 லட்சம் நெல் சேமிக்க 43 சேமிப்புக் கிடங்குகள் தயாா்!

நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி

மன்னாா்குடி சேமிப்புக் கிடங்குகளில் 1 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தேக்கம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



