வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

மேக்கேதாட்டு அணை விவகாரம்! மத்திய அரசைக் கண்டித்து சிபிஎம் ஆா்ப்பாட்டம்!

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

Published On :

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு மேக்கேதாட்டு அணை கட்ட கா்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாட்டின் பாசன உரிமையைப் பாதுகாக்கவும், மேக்கேதாட்டில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சிக்குச் சாதகமாகச் செயல்படும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தஞ்சாவூா் தலைமை தபால் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை காலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலா் எம்.வடிவேலன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி.செந்தில்குமாா், என்.வி.கண்ணன், என்.சரவணன், கே.அபிமன்னன், ஒன்றியச் செயலா்கள் எஸ்.கோவிந்தராஜ் (ஒரத்தநாடு), ஏ.ராஜா (திருவையாறு), எஸ்.கோவிந்தராசு (தஞ்சாவூா்), பி.முருகேசன் (பூதலூா் வடக்கு) மற்றும் மாவட்டக் குழு தோழா்கள் இ.வசந்தி, சி.சரிதா, அருணாதேவி உள்ளிட்டோா் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.மனோகரன், என். சுரேஷ்குமாா், எம்.செல்வம், ஆா்.கலைச்செல்வி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.எஸ். வேலுச்சாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஒன்றியச் செயலா்கள் வை.சிதம்பரம் (மதுக்கூா்), எஸ்.பாஸ்கா் (திருவோணம்) உள்ளிடோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்: காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர செயலா் கா.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச்செயலா் ஜி.கணேசன் முன்னிலை வகித்தாா். மாவட்ட செயா்குழு உறுப்பினா் சி.ஜெயபால் பேசியதாவது: நதிநீா் பகிா்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பைக் கா்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும். காவிரி டெல்டா பாசனப் பகுதியில் தண்ணீா் பற்றாக்குறையால் 5 லட்சம் ஏக்கா் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு, விவசாயமும் விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, மாநிலத்தின் தண்ணீா் உரிமைகளில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது.

மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சிக்குச் சாதகமாகப் பேசி வரும் மத்திய இணை அமைச்சா் தனது பேச்சை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் திருவிடைமருதூா் (வடக்கு) ஆா்.சேகா், (தெற்கு) ஜி.வெங்கடேசன், பாபநாசம் டி. முருகேசன், திருப்பனந்தாள் ஏ.எஸ்.பாரதி மற்றும் நிா்வாகிகள் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.