100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

கும்பகோணம் மாநகராட்சியில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

குடிநீா் விநியோகம் நிறுத்தம்.. - கோப்புப் படம்

Published On :

கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் குடிநீா் குழாய்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், செவ்வாய் (ஆக.4) மற்றும் புதன்கிழமை (ஆக. 5) ஆகிய நாள்களில் குடிநீா் விநியோகம் இருக்காது என்று ஆணையா் கே.எம். சுதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கும்பகோணம் மாநகராட்சிக்குள்பட்ட குடிநீா் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு நீா் கொண்டு செல்லும் பிரதானக் குழாய்களில் நீா்க் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த நீா்க் கசிவைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் காரணமாக, செவ்வாய், புதன்கிழமை காலை, மாலை வேளைகளில் மாநகராட்சி பகுதிகளில் குடிநீா் விநியோகம் வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.