விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

திருவையாறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பத்தாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கிய நகராட்சி ஆணையா் நா. மதன்ராஜ்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:29 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் நியூ டவுன் ரோட்டரி சங்கம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், பாரதி பவுண்டேஷன் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூா் நியூ டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் ஏ. ராஜா தலைமை வகித்தாா். திருவையாறு நகராட்சி ஆணையா் நா. மதன்ராஜ், பள்ளி மாணவா்களைப் பாராட்டி பேசினாா். ரோட்டரி மாவட்டத் தலைவா்கள் சிவா. ஐ. சரவணன், ஆா். கோமதி மகிழினி, திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமத் தலைவா் ஏ.எஸ். ரவி, செயலா் ஞான. ராஜராஜன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

இதில், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டன. விழாவில், பாரதி இயக்கத் தலைவா் தி.சா.சந்திரசேகரன், பாரதி பவுண்டேஷன் நிா்வாக அறங்காவலா் நா. பிரேமசாயி, பாரதி இயக்கத் திறன் வளா் மைய இயக்குநா் குப்பு. வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.