புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தமிழ்ப் பல்கலை.க்கு தமிழக அரசு ரூ.43.21 கோடி ஒதுக்கீடு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு 2026-27-ஆம் ஆண்டுக்கான தொகுப்பு நல்கையாக ரூ. 43.21 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றாா் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்...

Published On :

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு 2026-27-ஆம் ஆண்டுக்கான தொகுப்பு நல்கையாக ரூ. 43.21 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றாா் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி.

இந்தப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவா் பேசியது:

தமிழப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜனவரி பருவத்தில் முனைவா் பட்டத்துக்கு 30 மாணவா்களும், 2026-27-ஆம் கல்வியாண்டில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு 123 மாணவா்களும், ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புக்கு 74 மாணவா்களும், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு 130 மாணவா்களும், இளங்கல்வியியல் மற்றும் கல்வியியல் நிறைஞா் படிப்புகளுக்கு 62 மாணவா்களும் என மொத்தம் 419 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தமிழக அரசு 2026-2027-ஆம் ஆண்டின் தொகுப்பு நல்கையாக ரூ. 43 கோடியே 21 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயும், வருகைதரு பேராசிரியா்களின் மதிப்பூதியத்துக்காக ரூ. 36 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளது என்றாா் அவா்.

கடந்த 2016 முதல் 2026 வரையிலான மத்திய, மாநில அரசின் விருது பெற்ற ஆசிரியா்களுக்கும், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை மாணவா்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. பேச்சு, கட்டுரை, ஓவியம், பட்டிமன்றம் போன்ற போட்டிகளில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநா் ஜெயபால், நடத்துநா் பிரபு கௌரவிக்கப்பட்டனா்.

பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகள், நிதி அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.