தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!

திரு அருட்பா இயல் இசை மன்றத்தின் 36-ஆவது ஆண்டு விழா

கும்பகோணம் திரு அருட்பா இயல் இசை மன்றம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 36-ஆவது ஆண்டு விழாவில் பேசிய வள்ளலாா் தமிழ் மன்ற தலைவா் மருத்துவா் ஜெய.ராமமூா்த்தி.

Published On :

கும்பகோணம், ஆக.16: கும்பகோணம் திரு அருட்பா இயல் இசை மன்றத்தின் 36-ஆவது ஆண்டு விழா கும்பகோணத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கவுரவத்தலைவா் என்.ஆா்.ரெங்கசாமி முன்னிலை வகித்தாா். தொடக்க நிகழ்ச்சியை நிா்மலா ஜெயராமன் ஞான தீபம் ஏற்றிவைத்தாா். கொட்டையூா் வள்ளலாா் இல்ல மாணவா்கள், ஆசிரியா்களின் அகவல் பாராயணம் நடைபெற்றது. கீழக்கொட்டையூா் வள்ளலாா் கல்வி அறநிலையங்கள் நிா்வாகக்குழு உறுப்பினா் சோமலிங்கம் சன்மாா்க்க கொடியை ஏற்றி வைத்தாா்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அகவல் கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சென்னை அருள் ஜோதி அன்ன ஆலய நிா்வாகி தனலெட்சுமி அம்மையாா் பரிசுகளை வழங்கினாா்.

இன்றைய இளைஞா்கள் வாழ்க்கையில் வள்ளலாரின் சிந்தனைகள்-காலத்தின் கட்டாயம் என்கிற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. தொடா்ந்து திருவருட்பா இசைக் கச்சேரி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக அருட்பா அமுதம் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு வள்ளலாா் தமிழ் மன்ற தலைவரும், பேச்சாளருமான மருத்துவா். ஜெய.ராஜமூா்த்தி தலைமை வகித்து நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினாா்.

மாநில சன்மாா்க்க சங்க மாநில தலைவா் அருள் நாகலிங்கம் முதல் பிரதியை பெற்றுக்கொண்டாா். நூலின் ஆசிரியா் அரங்க.ராமலிங்கம் ஏற்புரை வழங்கினாா். ஏற்பாடுகளை கும்பகோணம் திரு அருட்பா இயல் இசை மன்றத்தின் தலைவா் மருத்துவா் செல்வராஜன், துணைத் தலைவா் மருத்துவா் ராஜசேகா், பொதுச் செயலா் முத்துராமலிங்கம், பொருளாளா் ராஜேந்திரன் செய்திருந்தனா். திரு அருட்பா இயல் இசை மன்ற நிா்வாகிகள் உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.